19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் திருப்பூர் மாவட்ட மாநாடு. நாள்: 14-11-2011 இடம்: ஏஞ்சல் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி, திருப்பூர்.
பத்திரிக்கைச்செய் தி.
19வது தேசிய குழந்தைகள் அறிவியல் திருப்பூர் மாவட்ட மாநாடு 14-11-2011 அன்று திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 18 பள்ளிகளைச்சேர்ந்த
(அரசுப்பள்ளிகள் குண்டடம் மற்றும் பல்லடம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து ஒன்றும், சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்றும் ,மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளிகள் 14-ம்) 41 ஆய்வுக்கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் 200பேரும், வழிகாட்டி ஆசிரியர்கள் 30 பேரும் கலந்து கொண்டனர்.
மாநாட்டு வரவேற்புரையை ஏஞ்சல் கல்லூரி முதல்வர் திரு. டாக்டர் ந.குனசேகரன் நிகழ்த்தினார். ரொட்டேரியன் ஏ.எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநாடு பற்றி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஆ.ஈசுவரன் உரை நிகழ்த்தினார். மாநாட்டுச்சிறப்புரையை திருப்பூர் தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு,கே.தங்கவேல் நிகழ்த்தினார். திரு.லெனின்பாரதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச்செயலர் வாழ்த்துரை வழங்கினார்.
பின்பு மாணவ மாணவிகள் ” நிலவளம்- வளமைக்குப்பயன்படுத்துவோம்-வரு ம் தலைமுறைக்குப் பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் 3 மாதமாக செய்துவந்த ஆய்வுக்கட்டுரைகளை நடுவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்துப்பேசினர். திரு.டாக்டர் ஏ.மோகன்ராஜ் (சிக்கண்ணா அரசு கல்லூரி)தலைமையில் 12 பேர் கொண்ட நடுவர்கள் குழு 4 பிரிவாகப்பிரிந்து மாணவர்களின் ஆய்வறிக்கையை ஆய்வு செய்தனர்.
மொத்தம் சமர்ப்பிக்கப்பட்ட 41 ஆய்வறிக்கைகளில் வருகிற 24 முதல் 26 வரை சத்தியமங்கலம் பன்னாரியம்மன் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கு கீழ்க்கண்ட 5 ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
1) தமிழ் சீனியர்: கால் நடை கழிவுகளும் மண்வள மேம்பாடும்-ஓர் ஒப்பீடு . ஆய்வுக்குழு தலைவர்: திரு. ஜி.வேல்முருகன். 11 வ்து.
பள்ளி: ஜேசீஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி, காங்கயம்.
2) ஆங்கிலம் சீனியர்: THE IMPACTS OF VEGETABLE WASTES ON SOIL “ ஆய்வுக்குழு மாணவர் தலைவர்: திரு.எஸ்.கே.வினோத் சபரீஸ். 11 வது.
பள்ளி: கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, அங்கேரிபாளையம், திருப்பூர்.
3) ஆங்கிலம் சீனியர் : “ WINDS FARMS-ITS IMPACT ON AGRICULTURE” ஆய்வுக்குழு தலைவர்: எம்.சங்கவி 11வது.
பள்ளி: தி பிரண்ட் லைன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பெருந்தொழுவு, திருப்பூர்.
4).ஆங்கிலம் :ஜூனியர்: ‘ MONITORING OF LAND USE PATTERN INFLUENCED BY INDUSTRIALISATION IN NALLUR”
ஆய்வுக்குழு தலைவர்: எஸ்.எஸ்.விஷ்னு பிரியன் 8 வது.
5) ஆங்கிலம்: ஜூனியர்: “RESEARCH ON SOIL,WELL AND POND WATER OF KATHANKANNI VILLAGE POLLUTED BY TIRUPPUR DYEING EFFULENTS.
ஆய்வுக்குழு தலைவர்: செல்வி.பி. நிமிஷா பர்வீன். 7 வது.
பள்ளி: பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ், முதலிபாளையம் பிரிவு,திருப்பூர்.
நிறைவு விழா மாலை 5 மணிக்கு நடைபெற்றது. திரு.பேரா.ராஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார். ரொட்டேரியன் திரு. ஏ.எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின், மாநில
கல்வி ஒருங்கிணைப்பாளர் பேரா.திருமதி மோகனா, திரு டாக்டர் என்.குணசேகரன் முதல்வர்,ஏஞ்சல் கல்லூரி, திரு. டாக்டர் ஏ.முருகநாதன் சிறப்புரையாற்றினர். திரு. மீனாட்சிசுந்தரம் செயலாளர் ரோட்டரி சங்கம் வடக்கு மற்றும் திரு.ஆ.ஈசுவரன்,தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையாற்றினர்.
4 attachments — Download all attachments View all images
DSC_9680.JPG 3319K View Download |
DSC_9663.JPG 3410K View Download |
DSC_9665.JPG 3363K View Download |
DSC_9667.JPG 3176K View Download |
Reply | Forward | leninbarathi is not available to chat |
No comments:
Post a Comment