அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ..
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , திருப்பூர் , உடுமலை வட்டக் கிளை சார்பாக 12.03.2012 அன்று
ராகல்பாவி , கிராமத்தில் கலிலியோ துளிர் இல்லத் துவக்க விழா இனிதே நடைபெற்றது .
விழாவிற்கு வருகை தந்தவர்களை உடுமலை வட்ட செயலாளர் , திரு. கண்ணபிரான் வரவேற்று பேசினார் . விழாவிற்கு கிராமக் கல்வி குழு தலைவர் திரு.வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார். உடுமலை கிளை தலைவர் திரு.கண்டிமுத்து தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி மாணாக்கர்களுக்கு மாவட்ட செயலாளர் திரு.லெனின்பாரதி அவர்கள் சிறப்புரையாற்றினார். மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திரு. சந்திரசேகரன் அவர்கள் துளிர் இல்லங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் , விழாவில் மாவட்ட துணைத்தலைவர் திரு. ஸ்ரீரங்கன் , உடுமலை வட்ட பொருளாளர் திரு.மணி மற்றும் ராகல்பாவி தன்னார்வலர்கள் திரு.லோகநாதன் , திரு.கோபால் , திரு.குருநாதன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாடல், கதை , போன்ற செயல்பாடுகள் நடைபெற்றது .
இறுதியாக உடுமலை வட்ட துணை செயலாளர் , திரு.பாலகிருஷ்ணன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது .
புகைப்படங்கள் ....